நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு சுகாதாரமான படுக்கைகள் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனர், தலைவர் ஜான் விக்டர்தாஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அறைகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் பழுதாகி மோசமாக உள்ளன. அவற்றை மாற்றி விட்டு சுத்தமான படுக்கைகள் வழங்க வேண்டும்.
இந்த மருத்துவமனையின் முதல்வர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு, பெரும்பாலும் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களே டீன்களாக நியமிக்கப்படுகிறார்கள் இதனால் மருத்துவமனை நிர்வாகத்தை முறைப்படுத்தி செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்த பட்சம் ஓராண்டாவது பணியில் இருக்கும் முதல்வரை நியமிக்க வேண்டும்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 100 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே மருத்துவக் கல்லூரியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.