நாகர்கோவிலில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 11) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 11ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர். பெறப்படும் மனுக்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் அதே நாளில் மனுக்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும் முடியும். எனவே மாற்றுத் திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முருகனுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை... இரண்டுபட்டு வருவதால் குழப்பம்!

முதல்வர், தளபதி விஜய்யிடம் முறையிடுவேன்.. வடக்கிந்திய லாரி ஓட்டுநர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த காவலர்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: டேரில் மிட்செல் விலகல்!






