ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

கோதேஸ்வரம் கோயில் திருவிழா நாளை தொடக்கம்

மார்த்தாண்டம் அருகேயுள்ள அருள்மிகு கோதேஸ்வரம் பத்ரகாளி கோயில் வருஷாபிஷேக திருவிழா சனிக்கிழமை (ஜூன் 9) தொடங்கி 9 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

மார்த்தாண்டம் அருகேயுள்ள அருள்மிகு கோதேஸ்வரம் பத்ரகாளி கோயில் வருஷாபிஷேக திருவிழா சனிக்கிழமை (ஜூன் 9) தொடங்கி 9 நாள்கள் நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோமம்,  ஸ்தோத்திர பாராயணம், காலை 7 மணிக்கு தீபாராதனை, அஷ்டாபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை,  பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மாலை 3 மணிக்கு திருநாம ஜெபவேள்வி, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை, சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறும். 
2ஆம் திருநாளான ஜூன் 10ஆம் தேதி காலை 9 மணிக்கு இக்கோயில் சமய வகுப்பு மாணவர், மாணவிகளின் பண்பாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. 4 ஆம் திருநாளன்று காலை 9.30 மணிக்கு சுமங்கலி பூஜை,  மாலை 3 மணிக்கு ராகுகால துர்கா பூஜை,  மாலை 5 மணிக்கு ஏகாதசி பூஜை நடைபெறுகிறது. 
7ஆம் திருநாளான ஜூன் 15ஆம் தேதி இரவு 8 மணிக்கு மாணவர் மாநாடு நடைபெறும். 9ஆம் திருநாளன்று காலை 8 மணிக்கு கிள்ளியூர் ஒன்றிய சமய வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் மற்றும் கோதேஸ்வரம் கோயில் சேவா அறக்கட்டளை ஆகியன இணைந்து செய்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.