மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

குமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை: 76 அடியை எட்டும் பெருஞ்சாணி அணை நீர்மட்டம்

குமரி மாவட்டத்தில் 2 நாள் ஓய்வுக்குப் பின்னர் திங்கள்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.

Updated On :26 ஜூன் 2018, 7:32 am IST

குமரி மாவட்டத்தில் 2 நாள் ஓய்வுக்குப் பின்னர் திங்கள்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் தொடர் சாரல் மழை பெய்து வந்த நிலையில்  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழை சற்று ஓய்ந்து காணப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் முதல் மாவட்டத்தில் அணைப் பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் சாரல் மழை மீண்டும் பெய்தது.
அணைகளில் நீர்மட்டம்: திங்கள்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 13.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 614 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு  598 கன அடி நீர் பாசன கால்வாயில் சென்று கொண்டிருந்தது. 
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 431கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 609 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்து. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 15.91 அடியாக உயர்ந்திருந்தது. 
அணைக்கு விநாடிக்கு 125 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த அணை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து இந்த அணையிலிருந்து விநாடிக்கு 125 கன அடி தண்ணீர் பாசனக் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 16 அடியாக இருந்தது.
மழை சற்று தணிந்திருந்த நிலையில் திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை காலையில் தண்ணீரின் வேகம் சற்றுத் தணிந்து, உருகிய வெள்ளி வடிவது போல் கொட்டிக் கொண்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.