தாழக்குடி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பூங்காவில் மர்ம நபர்கள் கதவுகளையும், மதுப் பாட்டில்களையும் உடைத்து பூங்காவை சேதப்படுத்தியுள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தாழக்குடி பேரூராட்சிக்குள்பட்ட சந்தவிளை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பூங்கா உள்ளது. இப்பூங்காவில் தாழக்குடி பேரூராட்சிக்குள்பட்ட தாழக்குடி, வீரநாராயணமங்கலம், மீனமங்கலம் காலனி, சந்தவிளை, தோப்பூர் போன்ற பகுதிகளில் சேகரிக்கப்படுகிற குப்பைகளை கொண்டு வந்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனியாக பிரிக்கப்பட்டு குப்பைகளை உரமாக மாற்றுகிற பணி நடைபெற்று வருகிறது.
இப்பூங்காவில் தற்காலிக பணியாளர்களாக 18 பேர் வேலை பார்ப்பதாகவும், இதில் மூன்று பிரிவாக பிரிந்து குப்பைகளை தாழக்குடி பகுதிகளில் பொதுமக்களிடம் சேகரித்து இங்கு கொண்டுவந்து தரம் பிரிக்கிற பணியை செய்கின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்த போது பூங்காவின் முன்பகுதி இரும்புக் கதவு சேதப்படுத்தப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டு இருந்த பூஞ்செடி தொட்டிகள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் மதுப்பாட்டில்கள் உடைத்து போடப்பட்டு இருந்தன.
வேலைக்கு வந்த தொழிலாளர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு: என்.எஃப்.சி.எஸ்.எஃப்.

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

