மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மார்த்தாண்டம் அருகே மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே ஆற்றுமணல் கடத்திச் சென்ற மினி லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:25 am

மார்த்தாண்டம் அருகே ஆற்றுமணல் கடத்திச் சென்ற மினி லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் கோயில் திருட்டை விசாரிக்க வந்த தனிப்படை போலீஸார் சனிக்கிழமை திக்குறிச்சி - பயணம் சாலையில் நின்றுகொண்டிருந்தனர்.   அப்போது,  அப்பகுதி வழியாக மினி லாரி வந்தது.  போலீஸாரை கண்டதும் மினி லாரியை அதன் ஓட்டுநர் வேறு சாலை வழியாக ஓட்டிச் சென்றார்.  இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீஸார் மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.  மார்த்தாண்டம் போலீஸார் விரைந்து சென்று மினி லாரியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.  இதில் ஆற்றுமணல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆற்று மணலுடன் மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர் மார்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ரெஜின் என்பவரை கைது செய்தனர். வாகன உரிமையாளர் சாந்தகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.