கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் திருடு போன சுவாமி சிலைகளை மீட்டு, சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை கைது செய்யாவிட்டால் மாநில அளவிலான போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
மார்த்தாண்டம் அருகே தாமிரவருணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது புகழ்பெற்ற திக்குறிச்சி மகாதேவர் கோயில். இக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு கோயில் அர்ச்சகர் கோயில் நடையை அடைத்துவிட்டு சென்றார். சனிக்கிழமை காலையில் கோயிலுக்கு வந்த போது, கோயிலின் வெளிப்பக்க பூட்டு மற்றும் பிரதான உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததுடன், கோயில் கருவறையில் இருந்த உற்சவமூர்த்தி சிலை உள்பட பல்வேறு சுவாமி விக்ரகங்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சுவாமி சிலைகள் திருடுபோன இக் கோயிலுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி மற்றும் பாஜக நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருகிறது. காவல்துறை தனிப்படை அமைத்து கோயில் திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திக்குறிச்சி கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இங்குள்ள மூலவர் சிலைக்கு சமமாக உற்சவ மூர்த்தி சிலை போற்றப்படுகிறது. திருடு போன உற்சவ மூர்த்தி சிலை ஐம்பொன்னால் ஆனது என தொல்லியல்துறை கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் சிலை திருட்டு சம்பவத்தின் தன்மையை குறைக்க திருடு போனது செம்பு சிலை என கூறி வருகிறார்கள். அவர்களது கோப்பில் இச் சிலை என்ன உலோகத்தால் ஆனது என குறிப்பிடாமல், சிலையின் பின்புறத்தில் வரும் திவாச்சி செம்பாலானது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் செம்பாலான சிலை என வழக்கை திசை திருப்பி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, இந்தச் சிலை கடத்தல் வழக்கை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது பல உண்மைகள் வெளிவரும் என தெரிவித்தார். மேலும் உடனடி நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மாநில அளவில் போராட்டங்கள் நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம்

ராமேசுவரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து சேதம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

