கன்னியாகுமரி பால்குளத்தில் நடைபெற்ற தேசிய 4 ஆவது கராத்தே போட்டியில் கேரள மாநில அணி முதலிடம் பெற்றது.
சிட்டோ ரியு கராத்தே பள்ளி சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியின் தொடக்க விழாவுக்கு ரோகிணி பொறியியல் கல்லூரி முதல்வர் டி.ஆர். ராஜேஷ் தலைமை வகித்தார்.
போட்டியினை, மாவட்ட ரோட்டரி விருது கமிட்டித் தலைவர் எம். சலீம், கல்லூரியின் தலைவர் கே.நீலமார்த்தாண்டன், கல்லூரி நிர்வாக இயக்குநர்கள் என்.நீலவிஷ்ணு, வி.எம்.பெல்ஸிஜியோ ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாகர்கோவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சி.சிதம்பரம்பிள்ளை, ஏ.வி.ஆன்ட்ரூ, எச்.சரவணசுப்பையா, ஆசிய கராத்தே போட்டி நடுவர் டி.இ.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் என்.செந்தில் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில் கேரள மாநில அணி முதலிடமும், தமிழக அணி 2 ஆவது இடமும், கர்நாடக அணி 3 ஆவது இடமும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ரோட்டரி உதவி ஆளுநர் எம்.நேசமணி தலைமை வகித்தார். விவேகானந்தா கேந்திர மெட்ரிக் பள்ளி முதல்வர் எஸ். ஆபிரகாம்லிங்கம், அகஸ்தீசுவரம் ஞானதீபம் பள்ளி முதல்வர் ஜே.ஐடா ஜான்சி, குமரி மாவட்ட குத்துசண்டை சங்க துணைத் தலைவர் ஐ.கார்த்திகேயன், எஸ்.எம்.சிவகுமார், எஸ்.பிரதீஸ்குமார் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். ஆசிய கராத்தே போட்டி நடுவர் கே.கே.எச்.ராஜ் போட்டியினை ஒருங்கிணைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








