அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

நாகர்கோவிலில் தொழிலாளி கொலை: மகன் கைது

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே கூலித் தொழிலாளியை அடித்துக் கொல்லப்பட்டார்.

Updated On :24 ஜனவரி 2019, 1:14 am IST

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே கூலித் தொழிலாளியை அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.
பூதப்பாண்டி அருகேயுள்ள காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (58),  கூலித் தொழிலாளி. இவரது மகன் தனுஷ் (23). சில நாள்களுக்கு முன்பு, மதுபோதையிலிருந்த தனுஷுக்கும், நடராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது நடராஜனை தனுஷ் சரமாரியாகத் தாக்கினாராம். பலத்த காயமடைந்த நடராஜன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதையடுத்து, காவல் துறையினருக்குத் தெரிவிக்காமல், நடராஜனின் சடலத்தை அவரது குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை புதைக்க முயன்றனர்.
தகவலறிந்த பூதப்பாண்டி போலீஸார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனையில்,  தாக்கப்பட்டதால்தான் நடராஜன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அழகியபாண்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஹரி நயினார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, தனுஷை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.