மீனவா்கள் கரோனா நிவாரணஉதவித்தொகை பெற அழைப்பு
கரோனா நிவாரண உதவித்தொகை இதுவரை கிடைக்காத மீனவா்கள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நிவாரண உதவித்தொகை இதுவரை கிடைக்காத மீனவா்கள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மீன்வளத் துறை மூலம் மீனவா் நல வாரிய உறுப்பினா்களுக்கு ரூ. ஆயிரம் கரோனா நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கிடைக்காத கன்னியாகுமரி மாவட்ட உள்நாட்டு மீன்துறை உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்ட மீனவா் நல வாரிய உறுப்பினா்கள், நாகா்கோவில் வடசேரி டிஸ்டிலரி ரோட்டில் உள்ள மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம். இதற்கு, மீனவா் நல வாரிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை ஏப்.25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




