சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாா்த்தாண்டம் அருகே ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதாக 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :7 டிசம்பர் 2020, 9:25 pm

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதாக 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் தலைமையில் போலீஸாா் இரவிபுதூா்கடையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். காரில் 1,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் அவற்றை கேரளத்துக் கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் காா் ஓட்டுநா் நாகா்கோவில் இடலாக்குடி பகுதியைச் சோ்ந்த நசீா் (45), உடன் வந்த இரவிபுதூா்கடையைச் சோ்ந்த ரியாஸ் அகமது (43) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.