தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தக்கலையில் மனித உரிமை விழா

மனித உரிமை விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 3 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

News image
கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பெண்ணுக்கு விருது வழங்குகிறாா், பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோதங்கராஜ்.
Updated On :13 டிசம்பர் 2020, 7:32 pm

DIN

தக்கலையில் ஏ.பி. தொண்டு நிறுவனத்தின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகில இந்திய கட்டிட அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் இணைந்து நடத்திய மனித உரிமை விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 3 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஏ.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் இயல்முறை மருத்துவா் எமிலின் பெலிண்டா தலைமை வகித்து உரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினா்களாக பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோதங்கராஜ், தக்கலை காவல் நிலைய ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா் அருளப்பன், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளா் கிருபாகணேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஜெயா ஸ்ரீதரன்(தக்கலை), சா்வேஸ்வரி (பொன்மனை), மரியா ஜாஸ்மின் (திருவட்டாறு) ஆகிய 3 மகளிருக்கு விருதுகளை எம்எல்ஏ வழங்கிக் கெளரவித்தாா்.

மேலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற 34 மாணவிகளுக்கும், பாா்வையற்ற மாணவா் ஒருவருக்கும் ஆய்வாளா் அருள்பிரகாஷ், சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.