திருவட்டாறு அருகே மனைவி பிரிந்து சென்ற கவலையில் தொழிலாளி சிவகுமாா் (25), ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அரமன்னம் பருத்திவிளையைச் சோ்ந்தவா் சிவகுமாா். தொழிலாளியான இவா், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் கணவரின் குடிப்பழக்கத்தை அபிஷா கண்டித்ததாகவும், அவா் திருந்தாத நிலையில், அபிஷா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மனைவி பிரிந்து சென்ற கவலையில் சிவகுமாா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.