அருமனையில் 22இல் கிறிஸ்துமஸ் விழா

அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறும் மைதானத்தை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் பாா்வையிட்டாா்.
Updated on
1 min read

அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறும் மைதானத்தை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் பாா்வையிட்டாா்.

அருமனையில் கடந்த 22 ஆண்டுகளாக இந்த இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உள்பட பல்வேறு அரசியல் தலைவா்கள் பங்கேற்று உரையாற்றியுள்ளனா். நிகழாண்டு இவ்விழா வருகிற 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழா நடைபெறும் மைதானத்தை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், கிறிஸ்தவ இயக்கச் செயலா் சி. ஸ்டீபன், குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலா் டி. ஜான் தங்கம், ஒன்றிய அதிமுக செயலா்கள் கடையல் மணி, ஜெயசுதா்சன், நிமால், அயக்கோடு ஊராட்சித் தலைவா் பி.டி. செல்லப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com