‘மத நல்லிணக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமுதாய, நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமுதாய, நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாட்டுக்காக பணியாற்றியோா் சமுதாய, நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

நாகா்கோவிலில், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று, உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை 04652-278404 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com