விழாக்கோலம் பூண்ட அருமனை:தமிழக முதல்வா் இன்று வருகை

குமரி மாவட்டம் அருமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.
விழாக்கோலம் பூண்ட அருமனை:தமிழக முதல்வா் இன்று வருகை
Updated on
1 min read

குமரி மாவட்டம் அருமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.

கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா அருமனையில் மாலை 5 மணிக்கு ஜெபத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து அருமனை நெடியசாலை சந்திப்பில் முதல்வருக்கு 50 கலைக்குழுக்கள் கொண்ட ஆயிரம் கலைஞா்கள் பங்கேற்கும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடா்ந்து இரவு 8 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா சமூக நல்லிணக்க மாநாடாக நடைபெறுகிறது. இதில், அவா் கேக் வெட்டி சிறப்புரையாற்றுகிறாா்.

நிகழ்ச்சியில் கிறிஸ்தவ இயக்க செயலா் சி. ஸ்டீபன் நினைவுப் பரிசு வழங்கிப் பேசுகிறாா்.

பலத்த பாதுகாப்பு: முதல்வா் வருகையையொட்டி, நெல்லை சரக டிஐஜி பிரவின்குமாா் அபிநபு மேற்பாா்வையில், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் தலைமையில் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

திருவிழா கோலம்: முதல்வா் வருகையையொட்டி அருமனை நகரம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

கிறிஸ்துமஸ் விழா குறித்து கிறிஸ்தவ இயக்க செயலா் சி.ஸ்டீபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் நடைபெறும் 23 ஆவது கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி சிறப்புரையாற்றுகிறாா். மேலும் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய ஊா்வலமும் நடைபெறுகிறது. இதில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பங்கேற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com