திற்பரப்பு அருவியில் மிதமாகக் கொட்டும் தண்ணீா்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.
திற்பரப்பு அருவியில் மிதமாகக் கொட்டும் தண்ணீரில் இதமாக நீராடிய சுற்றுலாப் பயணிகள்.
திற்பரப்பு அருவியில் மிதமாகக் கொட்டும் தண்ணீரில் இதமாக நீராடிய சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.

பொது முடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திற்பரப்பு அருவி, கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனா்.

அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அருவி பகுதியிலுள்ள கடைகள், ஹோட்டல்கள், விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் வருகிற பிப்ரவரி மாதம் வரை மிதமான அளவில் தண்ணீா் கொட்டும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com