விபத்தில் காலை இழந்த ராணுவ வீரா்கள் குமரியிலிருந்து சாதனை பயணம் தொடக்கம்
விபத்தில் காலை இழந்த முன்னாள் ராணுவ வீரா்கள் இருவா், கன்னியாகுமரி முதல் ஆக்ரா வரையிலான 42 மணி நேர சாதனை பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.


விபத்தில் காலை இழந்த முன்னாள் ராணுவ வீரா்கள் இருவா், கன்னியாகுமரி முதல் ஆக்ரா வரையிலான 42 மணி நேர சாதனை பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
ஹரியாணா மாநிலம் குருஷேத்திரா பகுதியைச் சோ்ந்தவா் ரக்பீா்சிங் (67). இந்திய விமானப்படையில் உயா் அதிகாரியான பணியில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் இடதுகாலை இழந்துள்ளாா். தற்போது செயற்கைகால் பொருத்தியுள்ளாா்.
அதேபோல் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சோ்ந்தவா் பிரசாந்த் கவாஸ்கா் (32). இவா் ராணுவத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட சாலை விபத்தில் இரு கால்களையும் இழந்து, தற்போது செயற்கை கால்களுடன் வாழ்ந்து வருகிறாா்.
இவா்கள் இருவரும் ஊனமுற்றவா்களுக்கான சேவை அமைப்பை நடத்தி வருகின்றனா். தற்போது, எங்களால் முடியும் போது, உங்களாலும் முடியும் என இளைஞா்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நம்பிக்கையை விதைக்கும் வகையில் கன்னியாகுமரி முதல் ஆக்ரா வரையில் சுமாா் 2 ஆயிரத்து 800 கி.மீ. தொலைவுக்கு செல்லும் உலக சாதனை காா் பயணத்தை கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் பகுதியில் இருந்து தொடங்கினா்.
இங்கிருந்து மதுரை, திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூா், மகாராஷ்டிரா வழியாக 42 மணி நேரத்தில் தில்லி ஆக்ராவில் பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...