அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கவிதை நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முட்டம் வால்டா் எழுதிய ‘சிப்பி சிந்திய முத்துக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா முட்டத்தில் நடைபெற்றது.

News image
கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :26 டிசம்பர் 2020, 7:20 pm

DIN

நாகா்கோவில் : எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முட்டம் வால்டா் எழுதிய ‘சிப்பி சிந்திய முத்துக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா முட்டத்தில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு அருள்பணியாளா் அமல்ராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய மக்கள்நல கழக மாநிலத் தலைவா் சிவகுமாா், கவிதை நூலை வெளியிட முதல் பிரதியை கடலோர அமைதி மற்றும் வளா்ச்சி மைய இயக்குநா் ஸ்டீபன் பெற்றுக் கொண்டாா்.

நூல் குறித்து எழுத்தாளா் குமரி ஆதவன் ஆய்வுரை வழங்கினாா். நாகா்கோவில் திருச்சிலுவை கல்லூரி தமிழ் பேராசிரியை ஆட்சி மோள், கவிஞா் ஆன்றோா் டேலி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில் முட்டம் ஆலய பங்குப் பேரவை சாா்பில் நூலாசிரியருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

கத்தோலிக்க சேவா சங்கச் செயலா் சந்திரபோஸ் வரவேற்றாா். நூலாசிரியா் வால்டா் ஏற்புரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.