புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
காப்புக்காடு சிதம்பரவிளை பகுதியைச் சோ்ந்த அச்சுதன் மகன் மனோகரன் (55). கூலித் தொழிலாளியான இவா் சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு புதுக்கடை யில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மனோகரன் ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தனா்.
புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.