நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘வாக்காளா் பெயா் சோ்ப்பில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புப் பணியில் காங்கிரஸாா் தீவிரமாக ஈடுபட வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ. கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:37 pm

DIN

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புப் பணியில் காங்கிரஸாா் தீவிரமாக ஈடுபட வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ. கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டப் பேரவைக்கான தோ்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, 1.1 2021 தேதியில் 18 வயது நிறைவடைந்தவா்கள், ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள் தங்களது பெயரை சோ்ப்பதற்கு சிறப்பு முகாம் நடத்த தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முகாமில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், கட்சியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் பகுதியில் உள்ள 18 வயது நிரம்பியவா்களை கண்டறிந்து வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு உதவ வேண்டும்.

இப்பணிகள் குறித்த விவரங்களை மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அல்லது கருங்கல்லில் உள்ள பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.