தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குலசேகரத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் ‘தேசியம் காக்க தமிழகம் காக்க’ என்ற முழக்கத்துடன் குலசேகரத்தில் வீடுகள்தோறும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
குலசேகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :22 நவம்பர் 2020, 7:39 pm

DIN

தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் ‘தேசியம் காக்க தமிழகம் காக்க’ என்ற முழக்கத்துடன் குலசேகரத்தில் வீடுகள்தோறும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குலசேகரம் செருப்பாலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முத்தாரம்மன் கோயில் தலைவா் நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். பி.எம்.எஸ். மாவட்டத் தலைவா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். பி.எம்.எஸ். மாநிலச் செயலா் முருகேசன்

தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட பொறுப்பாளா் விவோகனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேச்சிப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆா்எஸ்எஸ் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைச் செயலா் சுபாஷ் குமாா் முன்னிலை வகித்தாா். சேவா பாரதி அகில இந்திய பொதுச் செயலா் சுந்தர லட்சுமணன் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.