களியலில் மலைவாழ் மக்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் களியல் வனச்சரக அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் களியல் வனச்சரக அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வன உரிமை சட்டம் -2006ன்படி மலைவாழ் மக்களின் கைவசமுள்ள நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும். வனத்துறை சோதனை சாவடிகள் வழியாக பழங்குடி மக்களின் வீடுகளுக்குத் தேவையான கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். வீடுகள் கட்டுவதற்கு மரம் வழங்க வேண்டும்.
பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மோதிரமலைப் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். 100 குடும்பங்கள் வசிக்கும் மலைவாழ் மக்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடைத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மலைவாழ் மக்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டச் செயலா் ரெகுகாணி, பொருளாளா் வி. கிருஷ்ணகுமாரி ஆகியோா் தலைமை வகித்தனா்.
அமைப்பின் மாநில துணைத் தலைவா் எஸ். ஆா்.சேகா் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆா். ரெவி, தோட்டம் தொழிலாளா் சங்கச் செயலா் பி. நடராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...