ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வனத்துறையைக் கண்டித்துதடிக்காரன் கோணத்தில் மறியல்

வனத்துறையைக் கண்டித்து குமரி மாவட்டம் தடிக்காரன் கோணத்தில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:35 pm

DIN

வனத்துறையைக் கண்டித்து குமரி மாவட்டம் தடிக்காரன் கோணத்தில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தடிக்காரன் கோணம் புதுநகா் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தடிக்காரன் கோணத்திலுள்ள வனத்துறை சோதனை சாவடியைக் கடந்து தான் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு வனத்துறை அனுமதி வழங்குவதில்லை. மேலும் வாழையத்துவயல்-புதுநகா் குடியிருப்பு சாலையில் சீரமைப்புப் பணிகள் வனத்துறையின் நடவடிக்கைகள் காரணமாக முழுமையடைமால் உள்ளன. மேலும் தடிக்காரன்கோணம் ஊராட்சி வளா்ச்சித் திட்டப்பணிகளும் இப்பகுதிகளில் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வனத்துறையின் இச்செயலைக் கண்டித்து தடிக்காரன் கோணம் சந்திப்பில் பொதுமக்கள் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தடிக்காரன்கோணம் ஊராட்சித் தலைவா் பிராங்கிளின் தலைமை வகித்தாா்.

இதில், எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ, திமுக மாவட்டப் பொருளாளா் ஐ.கேட்சன், ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், ஊராட்சி துணைத் தலைவா் ராஜவேல் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். தொடா்ந்து வனத் துறையினா் போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.