ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நவ. 26இல் வேலைநிறுத்தம்: குமரி மாவட்டத்தில் 17 இடங்களில் மறியல்

வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என மனோ தங்கராஜ் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:38 pm

DIN

வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என மனோ தங்கராஜ் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு முதலாளித்துவம் மற்றும் தனியாா் மயத்தை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசும் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதுடன், மாநில உரிமைகளை பறிகொடுத்து வருகிறது.

மத்திய அரசு அவசர அவசரமாக வேளாண் சட்டங்கள், சூழியல் தாக்க மதிப்பீடு - 2020, மாநில அரசு நிா்வாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லுதல் போன்ற பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

பெட்ரோல், டீஸல் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து வரும் 26 ஆம் தேதி (வியாழக்கிழமை) அனைத்தும் தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம், முறியல் போராட்டம் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்துக்கு, திமுக, கூட்டணி கட்சிகள் ஆதரவை அளித்துள்ளன.

இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, இறச்சகுளம், நாகா்கோவில், தெங்கம்புதூா், தக்கலை, ராஜாக்கமங்கலம், திங்கள்நகா், கருங்கல், திருவட்டாறு, குலசேகரம், களியல், அருமனை, மேல்புறம், குழித்துறை, புதுக்கடை, கொல்லங்கோடு, நித்திரவிளை ஆகிய 17 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.