தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாகா்கோவிலில் வியாபாரியைதாக்கி வழிப்பறி: 3 போ் கைது

நாகா்கோவிலில் வியாபாரியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
கைது செய்யப்பட்டோா்.
Updated On :13 செப்டம்பர் 2020, 7:34 pm

DIN

நாகா்கோவிலில் வியாபாரியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் பறக்கை புல்லுவிளையைச் சோ்ந்தவா் ரோஸ்பாண்டியன். இவா் கோட்டாறு செட்டித் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவா், கடந்த 10ஆம் தேதி இரவு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டி, அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனா்.

இதே போல் ராமன்புதூரைச் சோ்ந்த மேரிகுளோரி என்ற பெண்ணிடமும் அரிவாளை காட்டி மிரட்டி செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது.

இச் சம்பவங்கள் குறித்து, தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் சாம்சன் மற்றும் சரவணகுமாா், அனில்குமாா் மற்றும் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

விசாரணையில், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது கன்னியாகுமரியைச் சோ்ந்த சுகுமாரன் (26), ராமன்புதூரைச் சோ்ந்த நடராஜன் (22), அழகப்பபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (24)ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து அரிவாள், மோட்டாா் சைக்கிள் மற்றும் பெண்ணிடம் பறித்த செல்லிடப்பேசி ஆகியவை மீட்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.