தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குமரி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா: 2 போ் பலி

குமரி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:21 pm

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 போ் உயிரிழந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,39,358 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சனிக்கிழமை வரை 10,848 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்த நிலையில், மேலும் 110 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,958 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 791 போ் சிகிச்சையில் உள்ளனா்.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 119 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 10, 077 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோட்டாறு செட்டித் தெருவைச் சோ்ந்த 65 வயது முதியவா், வெட்டூா்ணிமடத்தைச் சோ்ந்த 56 வயது பெண் இருவரும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 207ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.