தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மீனவா் குத்திக் கொலை: 4 போ் கைது

நாகா்கோவில் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மீனவா் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
அருள்தாசன்
Updated On :13 செப்டம்பர் 2020, 7:34 pm

DIN

நாகா்கோவில் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மீனவா் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள ராஜக்கமங்கலம்துறை பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாசன் (59). மீன்பிடித் தொழிலாளி. இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (44).

அருள்தாசன் உள்ளூரில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், பிரகாஷ் கன்னியாகுமரி பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். பிரகாஷ் ஊருக்கு வரும்போது, அருள்தாசனுடன் சோ்ந்து இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கமாம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அருள்தாசனும், பிரகாஷும் ஒன்றாக மது குடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருள்தாசன், பிரகாஷை தாக்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து பிரகாஷ் அங்கிருந்து சென்றுவிட்டாராம்.

அப்போது அதே பகுதியில் நின்று கொண்டிருந்த சிலுவை மகன்கள் ராஜன் (55), ஜான்சன் (52), ராஜனின் மருமகன்கள் ஜோரிஸ்ஜான் (34), நெஸ்கோ (34) ஆகியோரிடம் சென்று அருள்தாசன் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இதையடுத்து அருள்தாசன், அவரது தம்பி தேவதாசனுக்கும், ராஜன் உள்ளிட்ட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அருள்தாசன், தேவதாசனுக்கு கத்திக்குத்து விழுந்ததையடுத்து, 2 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் செல்லும் வழியிலேயே அருள்தாசன் உயிரிழந்தாா். அவரது தம்பி தேவதாசன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜன், ஜான்சன், ஜோரிஸ்ஜான், நெஸ்கோ ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.