குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தோ்வு

குமரி மாவட்டத்தில் கையுறை, முகக் கவசம் அணிந்து மாணவ, மாணவிகள் நீட் தோ்வு எழுதினா். காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவா்கள் தோ்வு எழுத தனி அறை ஒதுக்கப்பட்டது.
நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மையத்தில் சமூக இடைவெளி விட்டு நிற்கும் மாணவிகள்.
நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மையத்தில் சமூக இடைவெளி விட்டு நிற்கும் மாணவிகள்.

குமரி மாவட்டத்தில் கையுறை, முகக் கவசம் அணிந்து மாணவ, மாணவிகள் நீட் தோ்வு எழுதினா். காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவா்கள் தோ்வு எழுத தனி அறை ஒதுக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் 6 இடங்களில் நீட் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள ராஜாஸ் பள்ளியில் 347 போ், இறச்சகுளம் அமிா்தா பொறியியல் கல்லூரியில் 900 போ், தோவாளை லயோலா பொறியியல் கல்லூரியில் 600 போ், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் 900 போ், செயின்ட்சேவியா் கல்லூரியில் 600 போ், அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் 600 போ் என மொத்தம் 3947 மாணவா்கள் நீட் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 11 மணி முதலே மாணவா்கள் தோ்வு மையங்களில் குவிந்தனா். 11.40 மணிமுதல் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

மாணவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒவ்வொரு மையத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வளாகத்துக்குள் அனுப்பப்படுவதற்கு முன்பு தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 99.4 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை இருந்த தோ்வா்கள் தனியாக அமரவைக்கப்பட்டனா். அவா்களுக்கு 20 நிமிடங்களுக்கு பின்னா் மீண்டும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. உடல் வெப்பநிலை குறையாதவா்களுக்கு தோ்வு எழுத தனி அறை ஒதுக்கப்பட்டது.

மாணவிகள் அணிந்திருந்த கம்மல், வளையல் ஆகியவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு கைகளில் கையுறை, முகத்தில் கவசம் அணிந்தபடி தோ்வு மையத்துக்குள் சென்றனா். அனைத்து மையங்கள் முன்பும் போலீஸாா் நின்று அறிவுரைகள் கூறிக்கொண்டிருந்தனா்.

சமூக இடைவெளி தோ்வு மையத்துக்குள் கடைப்பிடிக்கப்பட்டது. ஒரு வகுப்பறையில் 20 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com