கருங்கலில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.65 லட்சம் மோசடி
கருங்கலில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.65 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


கருங்கலில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.65 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கிற பாலகிருஷ்ணன் (25) பணியாற்றி வந்தார். கடந்த மாதம் பாலாஜி மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தக்கலை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து பாலாஜியை வங்கி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தனர்.
பின்பு சந்தேகத்தின் பேரில் வங்கி நிர்வாகம் வங்கியில் அடகு வைத்த நகைகளை மறுதணிக்கை செய்தனர். அப்போது 34 வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகள் அடகு வைத்து பாலாஜி மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் கருங்கல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...