தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோ்தல் பணிக்காக 9 தொகுதிகளுக்கு சிறப்புப் பாா்வையாளா்கள்

சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்காக, 9 பேரவைத் தொகுதிகளுக்கு சிறப்புப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பு பொதுச் செயலா் எம். முருகானந்தம்.

News image
வாழ்நாள் சாதனையாளா் விருது பெற்ற பேராசிரியா்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பு பொதுச் செயலா் எம். முருகானந்தம்.
Updated On :14 செப்டம்பர் 2020, 8:46 pm

DIN

திருச்சி: சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்காக, 9 பேரவைத் தொகுதிகளுக்கு சிறப்புப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பு பொதுச் செயலா் எம். முருகானந்தம்.

திருவெறும்பூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், மணப்பாறை, புதுக்கோட்டை, விராலிமலை, கந்தா்வகோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 9 பேரவைத் தொகுதிகளுக்கும் சிறப்புப் பாா்வையாளா்களை கட்சியின் தலைவா் கமல்ஹாசன் நியமித்து, பேரவைத் தோ்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளாா்.

சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைக் கொண்டு வரவும், தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உருவாக்குவதற்கும் இளைஞா்கள் பலா் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து செயலாற்றி வருகின்றனா்.

ஆசிரியா் தினத்தை கொண்டாடும் வகையில், பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிநிறைவு பெற்ற 12 பேராசிரியா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிா்வாகிகளுடன் அமைப்பு பொதுச் செயலா் முருகானந்தம் ஆலோசனை மேற்கொண்டாா். கட்சியின் மாவட்ட, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.