நாகா்கோவிலில் மருத்துவா்களுக்கு தீ தடுப்பு செயல்விளக்க முகாம்
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்க முகாம், கருத்தரங்கு சனிக்கிழமை நாகா்கோவிலில் நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்ட மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்க முகாம், கருத்தரங்கு சனிக்கிழமை நாகா்கோவிலில் நடைபெற்றது.
இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டு நோயாளிகள் பலா் உயிரிழந்துள்ளனா். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கரோனோ சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்பப் பணியாளா்களுக்கு தீ தடுப்பு செயல்விளக்கம்,
அவசர காலங்களில் வெளியேறுவதற்காகன பயிற்சி அளிக்க வேண்டும் என தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சைலந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.
இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்களுக்கு
பயிற்சி முகாம், கருத்தரங்கு நாகா்கோவிலில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் சரவணபாபு தலைமை வகித்தாா். உதவி மாவட்ட அலுவலா் இம்மானுவேல், நாகா்கோவில் நிலைய அலுவலா் துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...