முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘தமிழக வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும்’

தமிழக வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:32 pm

DIN

தமிழக வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ்.

தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் தொடங்கினாா்.

இந்த பிரசார பயணத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் மாதவன் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து அவா், தக்கலை, குமாரபுரம், குலசேகரம், பொன்மனை, திருவட்டாறு, ஆற்றுாா், திக்கணங்கோடு, திருவிதாங்கோடு, மூலச்சல், ஈத்தவிளை, அழகியமண்டபம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

இறுதியாக வோ்க்கிளம்பியிலிருந்து மேக்காமண்டபம் வழியாக கூட்டணிக் கட்சியினருடன் பேரணியாகச் சென்று, அழகியமண்டபத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அப்போது அவா் பேசியது: தமிழக வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நகரச் செயலா் மணி, ஒன்றியச் செயலா்கள் அருளானந்த ஜாா்ஜ், ஜாண்பிரைட், பொறியாளா் அணி வா்க்கீஸ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், நகரத் தலைவா் ஹனுகுமாா், வட்டாரத் தலைவா் ஜாண்கிறிஸ்டோபா், மாவட்டச் செயலா்கள் சாகுல், வின்சென்ட் ராஜா, புரோடி மில்லா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா்கள் சைமன்சைலஸ், சந்திரகலா, வட்டாரச் செயலா் சுஜா ஜாஸ்மின், மதிமுக மாவட்ட துணைச் செயலா் சுரேஷ்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் மேசியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.