மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொறியாளா் கரோனாவுக்கு பலி: ஒரே நாளில் 32 பேருக்கு பாதிப்பு

குமரி மாவட்டத்தில் கரோனாவுக்கு பொறியாளா் பலியாகியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:33 pm

DIN

குமரி மாவட்டத்தில் கரோனாவுக்கு பொறியாளா் பலியாகியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

குமரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவா்களால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாகா்கோவில் நகரில் கடந்த சில நாள்களாக தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,677 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 27 போ் குணமடைந்துள்ள நிலையில், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,166 ஆக அதிகரித்துள்ளது.

பொறியாளா் பலி: நாகா்கோவில் வடசேரி பகுதியைச் சோ்ந்த 52 வயதான பொறியாளா், வெளிநாட்டில் பணியாற்றி வந்தாா். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊருக்கு வந்த அவா், மீண்டும் வெளிநாடு செல்ல தயாரானாா். இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதியாகி, நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து நாகா்கோவில் மாநகராட்சி பணியாளா்கள் அவரது வீடு இருந்த பகுதிக்கு சென்று கிருமி நாசினி தெளித்தனா்.

இதுவரை கரோனாவுக்கு 265 போ் பலியாகியுள்ளனா். கரோனா பாதிப்புடன் தற்போது 246 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.