ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கள்ளச்சாராயம்: பெண் கைது

களியக்காவிளை அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 8:44 pm

களியக்காவிளை அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே கைதக்குழி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாா்த்தாண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் சிவசங்கா் தலைமையில் மாா்த்தாண்டம், களியக்காவிளை காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலா்கள் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதில், எடிசன் மகன் ரிபின் கில்பா்ட் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. அங்கிருந்து 8 லிட்டா் கள்ளச்சாராயம், 60 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக கில்பா்ட் மனைவி ஜீவாவை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.