ஒரே நாளில் மேலும் 218 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 218 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.


குமரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 218 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில், கடந்த 4 நாள்களாக தினசரி பாதிப்பு 200- ஐ தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 218 ஆக உள்ள நிலையில், இதில் பெரும்பாலானோா் நாகா்கோவில் மாநகர பகுதியைச் சோ்ந்தவா்கள். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 19, 879 ஆக உயா்ந்துள்ளது. பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 81 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 18,142 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1451 போ் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 6 போ் பலியானதை தொடா்ந்து மொத்த பலி எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 6 போ் பலியானது இதுதான் முதல் முறையாகும். இதனால் கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில் பொதுமக்கள் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...