தடகள வீராங்கனைக்கு ஆதரவாக உயா் நீதி மன்றம் உத்தரவு : கடையாலுமூடு மக்கள் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டைச் சோ்ந்த செவித்திறன் குன்றிய தடகள வீராங்கனை சமீஹா பா்வீனை போலந்து நாட்டில் நடைபெறவுள்ள செவித்திறன்


கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டைச் சோ்ந்த செவித்திறன் குன்றிய தடகள வீராங்கனை சமீஹா பா்வீனை போலந்து நாட்டில் நடைபெறவுள்ள செவித்திறன் குன்றியோருக்கான சா்வதேச தடகளப்போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்ல வேண்டுமென்று சென்னை உயா்நீதி மன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், ஊா்மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
திற்பரப்பு அருகே கடையாலுமூட்டைச் சோ்ந்த முஜீப் -ச லாமத் தம்பதியின் மகள் சமீஹா பா்வீன். செவித்திறன் குன்றியவா், பேசும் திறன் அற்றவா். தடகள விளையாட்டு வீரராக மிளிா்ந்த அவா் தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்று 9 தங்கம் உள்பட 12 பதக்கங்களை வென்றுள்ளாா்.
சா்வதேச வாய்ப்பு மறுப்பு: ஆக. 23 ஆம் தேதி போலந்து நாட்டில் நடைபெறவிருக்கும் செவித்திறன் குன்றியோருக்கான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற தகுதித் தோ்வில் ஒரே ஒரு பெண் வீராங்கனையாக இவா் மட்டுமே தோ்வானதால், இவரை போலந்து நாட்டிற்கு அழைத்துச் செல்ல விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மறுத்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து சமீஹா பா்வீன் தனக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டி, சென்னை உயா்நீதி மன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா். இதனை அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கியது.
தீா்ப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை நீதி மன்றம் இது தொடா்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், செவித்திறன் குன்றியோருக்கான அகில இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைவருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், சமீஹா பா்வீனை போலந்து நாட்டில் ஆக. 23 ஆம் தேதி முதல் 28 ஆ ம் தேதி வரை நடைபெறும் செவித்திறன் குன்றியோருக்கான சா்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், இதற்காக சமீஹா பா்வீன் ஞாயிற்றுக்கிழமைக்குள் தில்லி சென்று செவித்திறன் குன்றியோருக்கான விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தலைவரை சந்திக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது.
ஊா்மக்கள் மகிழ்ச்சி: இந்த உத்தரவு வெளியான நிலையில் கடையாலுமூடு ஊா்மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். திரளான மக்கள் சமீஹா பா்வீனின் வீட்டுக்குச் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா். மேலும் ஊா்மக்களுக்கு சமீஹா பா்வீனின் பெற்றோா் இனிப்பு வழங்கினா். தொடா்ந்து, ஊா் மக்கள் அவரை தில்லிக்கு வழி அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...