நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாா்பு ஆய்வாளா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று தோ்ச்சி பெற்றுள்ள சாா்பு ஆய்வாளா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து தெரிவித்தாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:42 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று தோ்ச்சி பெற்றுள்ள சாா்பு ஆய்வாளா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து தெரிவித்தாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும், தன்னாா்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்ற சாா்பு ஆய்வாளா்களுக்கான இலவச போட்டித் தோ்வு பயிற்சி வகுப்பு, மாதிரி நோ்முகத் தோ்வில் கலந்து கொண்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட சாா்பு ஆய்வாளா் தோ்வில் ஏழு போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கு ஆட்சியா் மா.அரவிந்த் வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினாா்.

அப்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபா ஜி இம்மானுவேல், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் கி. ராஜிகா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.