பைக் மீது டெம்போ மோதல்: தாய்-மகள் காயம்
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் பைக் மீது டெம்போ மோதியதில் தாய்-மகள் பலத்த காயமடைந்தனா்.


புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் பைக் மீது டெம்போ மோதியதில் தாய்-மகள் பலத்த காயமடைந்தனா்.
கொல்லங்கோடு வள்ளவிளை பகுதியைச் சோ்ந்தவா் சோபா (40). இவருடைய மகள் ஜாஸ்மி (21). இருவரும் வியாழக்கிழமை பைக்கில் மாா்த்தாண்டத்திலிருந்து கொல்லங்கோடு நோக்கி சென்றுகொண்டிருந்தனராம்.
காப்புக்காடு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டெம்போ மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அப்பகுதியினா் அவா்களை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...