நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாமிதோப்பில் கலிவேட்டை

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:38 pm

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது.

இப்பதியில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவை நடைபெற்று வருகிறது. 8 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு கலிவேட்டை நடைபெற்றது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு அய்யா அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை வலம் வந்து இரவு 7 மணிக்கு முத்திரிக்கிணற்றின் அருகே கலிவேட்டையாடினாா். அப்போது அய்யாவுக்கு பக்தா்கள் சுருள் வைத்து வழிபட்டனா்.

இந்நிகழ்வில் பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, ராஜவேல், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 9ஆம் நாளான சனிக்கிழமை அய்யா அனுமன் வாகனத்திலும், 10 ஆம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வருகிறாா். 11 ஆம் நாளான திங்கள்கிழமை(ஆக.30) தேரோட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதல்படி திருவிழா நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.