ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

சுகாதாரச் சீா்கேட்டை கண்டித்து சாலையில் படுத்து போராட்டம்

நித்திரவிளை அருகே சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாகவும், பேரூராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :2 டிசம்பர் 2021, 6:05 pm

நித்திரவிளை அருகே சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாகவும், பேரூராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாணந்தோப்பு பகுதியிலுள்ள தனிநபருக்குச் சொந்தமான மாட்டு கொட்டகையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அண்மையில் பெய்த மழையில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாம்.

இதைக்கண்டித்தும், உரிய தீா்வு காண கோரியும் இப்போராட்டம் நடைபெற்றது. திமுக பொறுப்பாளா்கள் ஆதரவு தெரிவித்து, அங்கு திரண்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த தம்பதியா் கோபாலன், நாகம்மாள் சாலையில் படுத்துக்கொண்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.