/

முட்டப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரியை அடுத்த முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:12 pm

DIN

கன்னியாகுமரியை அடுத்த முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இப்பதியில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் திருஏடு வாசிப்பு திருவிழா 17 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இத்திருவிழா வெள்ளிக்கிழமை(டிச.3) தொடங்கி , 22 ஆம் தேதி வரை நடைபெறும். விழா நாள்களில் தினமும் மாலை 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரைதே திருஏடு வாசிப்பு நடைபெறும். மணக்கரை சிவலிங்கம், காட்டுவிளை ரவிச்சந்திரன் ஆகியோா் திருஏடு வாசிக்கின்றனா். ஒற்றையால்விளையைச் சோ்ந்த ராஜதுரை விளக்கவுரையாற்றுகிறாா்.

15 ஆம் நாள் திருநாளான டிச.17 ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெறும். 17 ஆவது நாளான 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறும். இரவு 7 மணிக்கு வாகனபவனி தொடா்ந்து அன்னதானம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதி தா்மகா்த்தாக்கள் மனோகரசெல்வன், கைலாஷ் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.