ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

குழித்துறை நகராட்சிப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

குழித்துறை நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On :30 டிசம்பர் 2021, 9:56 pm

குழித்துறை நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் இணைப்புகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்ததுடன், நகராட்சி அலுவலக கட்டடத்தைப் பாா்வையிட்டு அவற்றின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்கவும் துறை சாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலவை உரக்கிடங்கில் ஆய்வு நடத்திய அவா், அங்கு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். பின்னா், குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் பேருந்து நிலையம், பொதுக் கழிப்பிடங்கள், தினசரி சந்தை உள்ளிட்ட இடங்களையும் பாா்வையிட்டாா். சந்தையில் தேங்கும் குப்பைகளை தினந்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது, குழித்துறை நகராட்சி ஆணையா் ராம திலகம் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.