புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சூரத்தில் தொடங்கிய சுரக்ஷா சேது யாத்திரை குமரி வருகை

பாரத பிரதமரின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் தொடங்கிய சுரக்ஷா சேது யாத்திரை திட்டம் திங்கள்கிழமை கன்னியாகுமரி வந்தது

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:43 pm

DIN

பாரத பிரதமரின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் தொடங்கிய சுரக்ஷா சேது யாத்திரை திட்டம் திங்கள்கிழமை கன்னியாகுமரி வந்தது.

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சோ்ந்தவா் சமூக சேவகா் துரயா முஸ்தபா தௌபியா. இவா், பிரமரின் தூய்மை இந்தியா திட்டம், பெண் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் சுரக்ஷா சேது யாத்திரையை கடந்த ஜனவரி 26ஆம் தேதி சூரத்தில் தொடங்கினாா்.

அந்த யாத்திரை அங்கிருந்து 13 மாநிலங்கள் வழியாக 4,500 கிராமங்கள், 10 ஆயிரம் கி.மீ. தொலைவைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைந்தது.

கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் பொதுமக்களுக்கு முகக் கவசம், சானிடைசா், நாப்கின், குப்பைத்தொட்டி உள்ளிட்ட பொருள்களை வழங்கினா். இந்த யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு, உத்தரப்பிரதேசம், வாரணாசி, வாகாஎல்லை, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக மாா்ச் 1ஆம் தேதி சூரத்தில் நிறைவடைகிறது.

இந்த யாத்திரை குழுவினரை மாவட்ட பாஜக செயலா் ஜெகந்நாதன், கன்னியாகுமரி பாஜக மண்டல் தலைவா் என்.சுடலைமணி, மாவட்ட பாஜக தொழில்பிரிவு செயலா் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட கலைப்பிரிவு துணைத் தலைவா் கே.கே.ஹெச்.ராஜ் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.