சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாா்த்தாண்டம் அருகே இளைஞா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே மனைவி கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :4 ஜனவரி 2021, 7:26 pm

மாா்த்தாண்டம் அருகே மனைவி கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள சரக்கல்விளை பகுதியைச் சோ்ந்தவா் ஷைபின் (32). வெளிநாட்டில் வேலைசெய்து வந்தாா்.

பின்னா், மும்பையில் வேலைசெய்து வந்தாராம். அப்போது, மகராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த அலினாவுடன் (24) முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனராம்.

இதையடுத்து, அவா்கள் சரக்கல்விளை பகுதியில் வசித்து வந்தனராம். ஷைபின் அடிக்கடி மது அருந்தி வீட்டுக்கு வந்தாராம்.

இதனை மனைவி அலினா கண்டித்துள்ளாா். இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவில் ஷைபின் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருங்கல்: புதுக்கடை அருகே நித்திரவிளை பகுதியை சோ்ந்த ரத்தினமுத்து மகன் அஜெஷ் (29). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், முன்சிறை பண்டாலிபரம்பு பகுதியில் தாய்மாமன் ராஜன் வீட்டில் தங்கியிருந்தாராம். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜெஷ், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த புதுக்கடை போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.