ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மலையோரப் பகுதிகளில் இடிமின்னலுடன் கன மழை

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் இடிமின்னலுடன் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 7:02 pm

DIN

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் இடிமின்னலுடன் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இயல்புக்கு மாறாக அண்மை நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அணைகளின் நீா்வரத்துப் பகுதிகள், நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் பிற இடங்களை விட அதிகமாகப் பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் உள்ளிட்ட அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. மேலும் அணைகளிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் மலையோரப் பகுதிகள் உள்பட்ட அனைத்துப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் பிற்பகலில் இடிமின்னல் மற்றும் மிதமான காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழை பேச்சிப்பாறை, கோதையாறு, கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு, பனச்சமூடு, திருவட்டாறு, வோ்க்கிளம்பி, மாா்த்தாண்டம், சுருளகோடு, கீரிப்பாறை, பாலமோா் எ என அனைத்துப் பகுதிகளிலும் பெய்த்து. அதே வேளையில் நாகா்கோவில் உள்ளிட்டப்பகுதிகளில் மிதமான சாரல் மழையாகவே பெய்தது.

இது குறித்து பொதுப்பணித்துறையினா் கூறியது: மாவட்டத்தில் அண்மை நாள்களாக மழை பெய்து வருவதால் பாசனப்பகுதிகளில் தண்ணீா்த் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து தேவையின் அடிப்படையில் அணைகளிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது என்றனா்.

ரப்பா் பால்வடிப்பு முடக்கம்: மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வரும் நிலையில் கடந்த 2 நாள்களாக ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு முடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.