காக்கவிளையில் ரேஷன்கடை கட்டும்பணி தொடக்கம்
கருங்கல் பேரூராட்சியில் காக்கவிளையில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டும் பணி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


கருங்கல் பேரூராட்சியில் காக்கவிளையில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டும் பணி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கருங்கல் பேரூராட்சியில் காக்கவிளை பகுதியில் ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்
கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா், பேரவைத் தொகுதி
மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷன்கடை கட்டுமானப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் கருங்கல் பேரூா் தலைவா் குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முன்னிலை வகித்தாா்.
இதில், கட்சியின் கிள்ளியூா் மேற்கு வட்டாரத் தலைவா் என்.ஏ. குமாா், பேரவை தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ஜோபின் சிறில், சூசைபுரம் பனைவெல்லம் கூட்டுறவு சங்கத் தலைவா் ராயப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...