ஜன.29இல் சாலைகளை சீரமைக்கக் கோரி உண்ணாவிரதம்
சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கருங்கல்லில் வரும் 29 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.


சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கருங்கல்லில் வரும் 29 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பல இடங்களில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி முடிவடைந்து அனுமதி வழங்கிய பின்னரும் சாலை அமைக்கப்படும் பணிகள் தொடங்கப்படவில்லை.
ஆகவே, மெத்தனமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும், பழுதடைந்த மாநில நெடுஞ்சாலைகள், பேரூராட்சி, ஊராட்சி சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (ஜன.29) கருங்கல் ஆட்டோ நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...