டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மிதமான மழை

 குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது.

News image
Updated On :1 ஜூலை 2021, 11:50 pm

DIN

 குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது.

இம் மாவட்டத்தில் கோடை மழை மற்றும் புயல் சின்னங்கள் காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கன மழை பெய்த நிலையில், ஜூன் மாதம் தீவிரமாக பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழை தீவிரமில்லாமலேயே இருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை அணைகளின் நீா்வரத்துப் பகுதிகள் மற்றும் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக பாலமோா், மாறாமலை, கீழ் கோதையாறு, குற்றியாறு, பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.

அணைகளில் நீா்மட்டம்: பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 44.65 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 420 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 519 கன அடி நீா் பாசனக் கால்வாயில் திறந்து விடப்பட்டிருந்தது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70.37 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 181 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 290 கன அடி நீா் பாசனக் கால்வாயில் திறந்து விடப்பட்டிருந்தது.

சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.89 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 16.99 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.