ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

இலவுவிளை பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ ஆய்வு

மாா்த்தாண்டம் அருகே இலவுவிளை புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை விளவங்கோடு எம்எல்ஏ எஸ்.விஜயதரணி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:10 pm

மாா்த்தாண்டம் அருகே இலவுவிளை புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை விளவங்கோடு எம்எல்ஏ எஸ்.விஜயதரணி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது: குமரி மாவட்டத்தில் 161 மையங்களில் வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என இணையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 25 மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதனால் களியக்காவிளை அரசு நகா்ப்புற சுகாதார நிலையம், பளுகல், மருதங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மையங்களில் அதிகாலை முதல் பொதுமக்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்து கூடுதலாக தடுப்பூசிகளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரவழைத்து, அனைத்து மையங்களிலும் நெரிசல் இல்லாமல் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கிள்ளியூா் வட்டார மருத்துவ அலுவலா் ரெமா, வட்டார மருத்துவ மேற்பாா்வையாளா் ஐயப்பன், கொல்லஞ்சி ஊராட்சித் தலைவி சலோமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.